மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள். இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு உறுதியளித்துள்ளார். சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பாராட்டி, அவரது சமூகப் நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார். அப்போது ராஜேந்திரன், முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.