Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சந்திரயான் 3….. லேண்டர் உயரம் இன்று குறைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து ‘லேண்டர்’ நேற்று மதியம்  வெற்றிகரமாக பிரிந்தது. நிலவில் 23-ந்தேதி தரை இறங்கும் இந்த லேண்டர் சாதனத்துக்குள் உள்ள ‘ரோவர்’ தனது ஆய்வை தொடங்கும். இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டர்  வரும் 23-ம் தேதி நிலவில் தரையிரங்குகிறது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இஸ்ரோ இணைந்து கண்காணித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!