Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

கரூர் மாவட்டம்  தோகைமலை மந்தை குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. நாட்டாமை மூர்த்தி சுப்பிரமணியன்  முன்னிலையில் ,   தெலுங்க பட்டி அரண்மனை ஜமீன்தார் நாராயணன் வெள்ளைத்துண்டை  கொடிபோல அசைத்து மீன்பிடித் திருவிழாவினை துவக்கி வைத்தார்.

மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு  போட்டிப்போட்டு  மீன்களை பிடித்தனர்.  வலை, துணி, கோணி போன்றவைகளை பயன்படுத்தி   மீன்களை பிடித்தனர். ஜிலேபி, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட  நாட்டு வகை மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன்  பிடித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!