Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈஷா யோக மையம் நடத்தும் வாலிபால் போட்டி.. 22 அணியினர் பங்கேற்பு…

கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் தென்னிந்திய அளவிலான மாபெரும் விளையாட்டுப் போட்டியை கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா யோக மையம் நடத்துகிறது. இதன் முதல்கட்டமாக வாலிபால் பிரிவில் மாவட்ட அளவிலான போட்டி மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய அனைத்து தாலுகா பகுதிகளில் இருந்தும் 22 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் பந்து வீசி போட்டிகளை தொடக்கி வைத்தார். மாவட்ட அளவிலான போட்டியில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே தலா ரூ.9000, ரூ‌6000, ரூ.3000, ரூ.2000 ஆகிய ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், முதல் நான்கு அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!