சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான மாரிமுத்து(56) நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரி என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் மகள் ஐஸ்வரியா தந்தைக்கு ஈமக்காரியங்களை செய்தார். பின்னர் உடல் வேன் மூலம் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் மாரிமுத்து உடல்…. சொந்த ஊரில் தகனம்
