தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் வீட்டை திமுக எம்பி கனிமொழி இன்று நேரில் சென்று பார்வையிட்டு தாய்க்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுமி காணாமல் போன வழக்கில் 34 நாட்கள் ஆன நிலையிலும் இந்த அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
உயர்நீதிமன்றத்தில் ஆணை உள்ளது. குழந்தை காணவில்லை என்று பதிவு செய்யக்கூடாது. கடத்தல் என்றுதான் பதிவு செய்ய வேண்டும். குழந்தைகள் மூலம் வாக்கு வாங்கிய விஜய், இதுபற்றி பேசவில்லை.
அவர் வரவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் பொறுப்பு அமைச்சர்கூட இங்கு வரவில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்து எத்தனை குழந்தைகள் காணாமல்போய் உள்ளார்கள். இதற்கு இந்த அரசு என்ன சொல்லப் போகிறார்கள். இந்த ஆட்சியில் அலோங்கோலம் இருக்கிறது. தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்றார்.
