Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணா பிறந்தநாள் விழா…. திருச்சி கோர்ட் வளாகத்தில் நடத்த அனுமதி மறுப்பு

திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது பிறந்தநாள் விழா கொண்டாடட்டத்திற்கு  வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.   சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில்  சீனி விடுதலை அரச, கங்கைச்செல்வன் ஆகியோர்  சிறப்புரையாற்ற இருந்தனர். வழக்கறிஞர்கள்  செ. வீரபாண்டியன்,  கார்ல் விக்டர் வீராசமி ஆகியோர்  வாழ்த்துரை வழங்க இருந்தனர்.

இதற்கிடையே இந்த விழாவை இங்கு நடத்தக்கூடாது என சில வழக்கறிஞர்கள்  எதிர்ப்பு தொிவித்து செசன்ஸ் நீதிபதி பாபுவிடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில்  பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா நடத்த  நீதிபதி பாபு அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக அவர்  வக்கீல்கள் சங்க தலைவர்  பாலசுப்பிரமணியனுக்கு  அளித்துள்ள பதிலில்,   இந்த விழா கோர்ட்  வளாகத்தில் நடத்த  உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி அனுமதி மறுக்கப்படுகிறது என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!