
இதைத் தொடர்ந்து இன்று இந்த பனை விதைகள் ஏரிக்கரைகள் மற்றும் குளக்கரைகளில் தூவப்பட்டன. தமிழகத்தின் தேசிய மரமாகிய பனைமரத்தை பாதுகாக்கும் முயற்சி இது என்று இயற்கை ஆர்வலர்கள் இதை வரவேற்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் மாசு ஏற்படுகின்றது.
அதற்குப் பதிலாக இது போன்ற முயற்சிகள் வழிபாடாகும் போது, இயற்கை வளமும், மர வளர்ப்பும் முன்னெடுக்கப்படும்.
இதை மோகன், மற்றும் மீட் அமைப்பின் சபாபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் வழிகாட்டலில் இந்த வழிபாடு நடந்தது.