Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா …. தேரோட்டம்…. பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து  பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டனர்.  அதனை தொடர்ந்து 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

7-ம் திருநாளான நேற்று ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.  இந்த நிலையில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  தேரில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி திருப்பதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!