Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பருவ மழை…திருச்சியில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

பருவ மழை காலங்களில் தடுப்பு நடவடிக்கை குறித்தும் இடர்பாடுகளில் சிக்கிக் கொள்ளும் மக்களை காப்பாற்றுவது குறித்தும் செயல்முறை விளக்கமாக தீயணைப்பு துறை வீரர்கள் மாவட்ட ஆட்சியருக்கு

எடுத்துரைத்தனர். பின்பு வருகின்ற பருவமழை காலங்களில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். அதேசமயம் தீபாவளி பண்டிகையின் போது விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட தீமைப்பு துறை அலுவலர் அனுசுயா பேசியது.. திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று செயல்முறை விளக்கம் நடைபெற்றது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!