Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினி வீட்டில் ஒன்றுகூடிய துர்கா ஸ்டாலின், விஜய் தாயார், கவர்னர் தமிழிசை…

நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ரஜினிவீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை ரஜினி மனைவி லதா ரஜினி செய்திருந்தார். அத்துடன் ஏராளமான விஐபிகளுக்கும் லதா ரஜினி தரப்பில் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி, விஜய்

தாயார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ரஜினி வீட்டில் சங்கமித்தனர். ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மனைவியுடன்

இந்நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார். அதேபோல திரை பிரபலங்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சென்னையில் அதுவும் நடிகர் ரஜினி வீட்டில், அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கிற அத்தனை சக்திகளும் ஒன்று திரண்டது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!