Skip to content

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.  இது ரிக்டர்அளவில் 6.2 என பதிவாகி உள்ளது.

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கையில்ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!