Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி அவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் நாகையில் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகை புதிய

பேருந்து நிலையம், பப்ளிக் ஆபிஸ் ரோடு, பழைய பேருந்து நிலையம், வெளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிகின்றன. எனவே நாகை நகராட்சி அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!