Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ஜல்லிக்கட்டு.. ஆசையை வெளிப்படுத்தினார் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தக் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் டில்லியில் ல்லியில் கலந்துகொண்டனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற மநீம நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மநீம தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது.. பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. அது கட்சிக்கு அப்பாற்பட்டது. அதேபோல், கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள், அதாவது என் மனதில் இருக்கும் சில திட்டங்கள் குறித்து பேசினோம். சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கொண்டுவந்து நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!