Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு துவங்கியது…இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.  இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததோடு, ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதி அளிக்க வேண்டும் என முறையிட்டனர். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தச்சங்குறிச்சிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்கள், விழாக்குழுவினருடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஆணை அரசிதழிலும் நேற்று வெளியிடப்பட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதனை அமைச்சர்கள் ரகுபதி,, மெய்யநாதன் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா தொடங்கி வைத்தனர். நேரமின்மை காரணமாக முதல் கட்டமாக போட்டி தொடங்குவதற்கு சிறுது நேரத்திற்கு முன்பே 15 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன,,, இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.. பெற்றி பரும் வீரர்களுக்கு பைக்குகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!