Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி, துணைத்தலைவி செல்வி விஜயகுமார் குத்துவிளக்கு ஏற்றினர்.

முகாமில் பிற்படுத்தப்பட்டோர் துறை, கூட்டுறவு துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்

துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வளித்தனர்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஐநூற்றி ஐம்பது மனுக்களில் நானூற்றி பத்து மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் நிகழ்ச்சியில் தொழிலதிபரும் தேமுதிக மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளருமான வி.பி.தங்கமணி, திமுக பிரதிநிதி மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!