Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிய 2 பேர்

கரூர் அருகே பட்டன் செல்போனில் பணம் அனுப்புவதுபோல் நடித்து பெட்ரோல் பங்க் ஊழியரை ஏமாற்றி சென்ற நபர்கள்– சிசிடிவி காட்சி வைரல்.

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே, பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற இரண்டு இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் சிவானந்தம் என்பவர் நடத்தி வரும் தனியார் பெட்ரோல்

பங்கிற்கு, ஸ்கூட்டியில் வந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தின் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து, ஊழியர் சுமார் 4 லிட்டர் பெட்ரோல் நிரப்பிய நிலையில், அதற்கான ரூ.440

தொகையை கேட்டுள்ளார். அப்போது, கையில் பணம் இல்லை எனக் கூறிய இளைஞர்கள், ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்ட ஒரு இளைஞர், வாகனத்தைத் தயாராக இயக்கியுள்ளார். மற்றொரு இளைஞரோ, பட்டன் செல்போனைப்

பயன்படுத்தி பணம் அனுப்புவதுபோல் நடித்து, தொகையைச் செலுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால், பணம் வரவில்லை என ஊழியர் தெரிவித்துப் பணத்தைக் கேட்டபோது, இருவரும் சற்றும் தாமதிக்காமல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

error: Content is protected !!