Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி அருகே சென்று 3 மாணவிகள் ஒன்று கூடி வெளியே சென்று மாயமாகியதாக கூறப்படுகிறது.

மூன்று மாணவியின் பள்ளிக்கு வராததால் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்,தொடர்ந்து பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் இடங்களில் தேடியுள்ளனர்.

நீண்ட நேரம் தேடியும் மாணவிகள் கிடைக்காத காரணத்தால், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து மூலம் மாணவிகள் பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.மேலும், அருகில் உள்ள மாவட்ட எல்லையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!