Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை நிராகரித்தது. இந்த நிலையில் கடந்தவாரமும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஜனவரி 8ம் தேதி  பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அமலாக்கத்துறை சார்பில் எந்த  பதிலும் அளிக்கவில்லை.  எனவே நீதிபதி அல்லி, வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய முடியாத அமலாக்கத்துறை எதற்காக வழக்கு தொடர்கிறீர்கள் ? என  கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமலாக்கத்துறை  வழக்கறிஞர், நாளை பதில் அளிப்பதாக அவகாசம் கேட்டார். இதையெடுத்து வழக்கு  விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!