Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் மாவட்ட எஸ்பி பொங்கல் கொண்டாடினார்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சியினை கொண்டாடினார்கள்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்

சிறுமிகள் என தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழச்சியில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜய ராகவன், அந்தோணி ஆரி, அரியலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்கள்.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.உடன் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, அரியலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாலு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், அற்புதராஜ், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!