Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்காள வாக்கு எண்ணிக்கை: பல இடங்களில் வன்முறை – மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் துமுர்ஜலா பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டு உள்ளது. அதன் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு உள்ளன. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு உள்ளன. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. அக்கட்சியின் கொடி தெருவில் தூக்கி வீசப்பட்டது.
இதேபோன்று, கூச் பெஹார் பகுதியிலும் தாக்குதல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தின்ஹடா டவுன் பகுதியின் தலைவர் பிஷு தார் என்பவரை பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் சேர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தாக்கினர்.

இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் இன்று கூறும்போது, பா.ஜ.க.வினர் பிற்பகல் 3 மணியளவில் இருந்து எங்களை அடிக்க தொடங்கினர். என்னையும் தாக்கினர். சி.சி.டி.வி. அணைக்கப்பட்டு விட்டது.
வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே எங்களுடைய முகவர்கள் யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எங்களுடைய முகவர்களை உள்ளே விடுவோம் என்று மாவட்ட அதிகாரி கூறினார். அதன்பின்னர் அவரை காணவே இல்லை. எல்லா இடத்திற்கும் சென்று நான் புகார் அளித்தேன். ஆனால் பலனில்லை என்று ஆவேசத்துடன் கூறினார்.

error: Content is protected !!