Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை இன்று மணிப்பூரில் துவக்கினார். இந்த 2ம் கட்ட யாத்திரை மும்பை வரை நடைபெறுகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் 2ம் கட்டம் மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது 15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து தவுபல் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதைப்போல அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வெடுப்பதற்கும் மாநில அரசு அனுமதி மறுத்தது. இதனால் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!