Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்க அதிபர் தேர்தல்….. விவேக் ராமசாமி திடீர் விலகல்

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
இதற்கிடையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அத்துடன், தான் அதிபராக வந்தால் பல மாற்றங்களை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி  திடீரென அறிவித்து உள்ளார்.

டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தான் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.மேலும், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

 

விவேக் ராமசாமி இந்தியாவில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்.  தமிழில் நன்றாக  பேசக்கூடியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!