Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வர உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகைள தொடங்கி விட்டன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கான  31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  அறிவித்து உள்ளது.  அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் பணிக்குழுவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரியே தலைவராக இருப்பார்.  ப. சிதம்பரம், செல்வபெருந்தகை,  குமரி அனந்தன், மணிசங்கர அய்யர், திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர்,  ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கார்த்தி சிதம்பரம்,  விஜய் வசந்த்,  பீட்டர் அல்போன்ஸ்,  தங்கபாலு,  விஷணு பிரசாத், கிருஷ்ணசாமி,  ராமச்சந்திரன்,  ஜோதிமணி,  மோகன்குமாரமங்கலம்,  ஹசன் மவுலானா  உள்பட 31 பேர் அதில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை,  மேலிட தலைவர்களுடன்  பிரசார, பொதுக்கூட்டங்களை  ஒழுங்கு செய்தல் போன்ற பணிகளை செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!