Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிம்லாவில் விபத்து…. கார் ஆற்றில் பாய்ந்தது… சைதை துரைசாமி மகன் மாயம்

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும்,  சைதை துரைசாமி ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர்கள்  கோபிநாத் உள்பட  சிலர்  இமாச்சல்  மாநிலம்  சிம்லாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு காரில்  கஷாங்  நளா என்ற இடத்தில் சட்லஜ் நதிக்கரையில்  நேற்று மதியம் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதிக்குள் பாய்ந்தது. இதில்  டிரைவர் அந்த இடத்திலேயே பலியானார். கோபிநாத்  காயங்களுடன் மீட்கப்பட்டார்.  சைதை துரைசாமி மகன் வெற்றி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி நடக்கிறது.   பனி மூட்டம் காரணமாக  பாதை தெரியாமல்  கார் நி்லைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்ததாக தெரியவந்துள்ளது.  இன்று காலை வரை  வெற்றியை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!