Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் போட்டியிட கமலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வர  உள்ளது.  அனைத்து கட்சிகளும் தேர்தல்  பணிகளை தொடங்கி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக  கோவை,  தென்சென்னை ஆகிய தொகுதிகளை அந்த கட்சி குறி வைத்து உள்ளது.  திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் கமல்  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட  வரும்படி கமலுக்கு அழைப்பு விடுத்து மயிலாடுதுறையில் நம்மவர்  கமல் நற்பணி இயக்கம் சார்பில் சுவரொட்டிகள்  மயிலாடுதுறை நகரில் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!