Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணை….. இன்று வெளியாகிறது

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்,  இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது.இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ளஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் நாடாளுமன்ற தேர்தலும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, இன்று  மாலை வெளியாக உள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது. முதல்போட்டி சென்னையில் நடைபெறலாம். இதில் கடந்த ஆண்டு சாம்பியனன் சென்னையும்,  2ம் இடம் பெற்ற குஜராத்தும் மோதுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!