Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என   மூன்று  பிரிவுகளாக  நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்

பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.  மாட்டு வண்டி ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்து  ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின்

கண்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள்   சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று  கைத்தட்டி ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர். மேலும் இந்த பந்தயத்தில்  முதல் மூன்று  இடங்களை பிடித்த மாட்டு வண்டி  உரிமையாளர்களுக்கு ரூ 3 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும்   வழங்கப்பட்டது. ஏம்பல் காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!