Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்னேரி…….அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பலி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில்  பொன்னேரி தொகுதியின் முன்னாள் அதிமுக  சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார். இந்தநிலையில் இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரவிக்குமார் பலியானார். மேலும் அவரது மனைவியும் அ.தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நிர்மலா காயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!