தேனியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் மனுவை பரிசீலித்தபோது அவரது மனு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே அதனை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக, அதிமுக வேட்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிடிவி வேட்புமனுவை பார்க்க உங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் தரப்படும். அதுவரை மனு நிறுத்திவைக்கப்படும் என கலெக்டர் அறிவித்தார்.