Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு….

பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இன்று காலை மலைக்கோட்டை நாகநாதர் கோவில் தனது பிரச்சாரத்தை துவக்கி தேவதானம், டவுன்ஸ்டேஷன், பாரதி நகர், காமராஜ் நகர், அன்னை நகர், கருவாட்டுப்பேட்டை, பூலோகநாதர் சாமி கோயில் தெரு, கமலா நேரு

நகர், கீரைகொல்லை, வசந்தநகர், வரகனேரி, மதுரை மெயின் ரோடு, மரக்கடை, சின்ன கடை மலைவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரசாரத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர், நிர்வாகி பார்த்திபன், ஓபிஎஸ் அணியை சேர்ந்த வெல்லமண்டி நடராஜன், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!