கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறையை அடுத்த பாரீ ஆக்ரோவுக்கு சொந்தமான முருகாளி ஏஸ்டேட்டில் நிரந்தர பணியாளராக பணிபுரியும் அருண் வயது 51 த/பெ அந்தோணிராஜ் இவர் அங்குள்ள ஃபீல்டு நம்பர் 4 A. என்ற பகுதியில் கள இயக்குனர் அறிவுறுத்தலின்படி மிளகு விளைச்சல் எவ்வாறு உள்ளது என பார்க்கச் சென்றபோது பின்புறம் ஒரு காட்டெருமை படுத்திருந்தது தெரியாமல் முன்னோக்கி சென்றுள்ளார் பின்னாடி வந்த காட்டெருமை அவர் தொடையின் மேல் பகுதியில் தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை வழியே வந்த டிரைவர் முணங்கள் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி செய்வதற்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சோகத்தில் ஆழ்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் பார்வையிட்டனர். மேலும் வால்பாறை காவல்துறையினர் நடந்தது எப்படி என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நீண்ட நாட்களுக்கு பின்பு வனவிலங்கால் உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.