Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரம் தாக்கி இறந்த எஸ்ஐ குடும்பத்திற்கு 25 லட்சம் முதல்வர் அறிவிப்பு ..

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி..  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். எஸ்ஐ  சரவணனின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சரவணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!