Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு வாரமாக போக்கு காட்டும் சிறுத்தை…. குத்தாலத்திற்கு இடம் பெயர்ந்தது

மயிலாடுதுறையில் ஆறாவது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம். 22 கிலோமீட்டர் கடந்து காஞ்சிவாய் என்ற இடத்தில் தென்பட்ட சிறுத்தையை பொம்மன், காலன் உள்ளிட்ட வனத்துறையினர் தேடி வருகின்றனர்:-

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி  இரவு சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இந்த சிறுத்தை நேற்று மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் இன்று காலை வனத்துறை வந்து பார்த்தபோது கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.

அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மசினகுடியில்  புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!