வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தின் போது டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ, தனது வாக்கு சேகரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர், இம்முறை இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
இன்று வெஞ்சமாங்கூடலூர் மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சிகளில் உள்ள ஊத்துக்கரை, குருமம்பட்டி, ஒத்தையூர், நந்தனூர், கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றிப்பார்த்து,

பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் பேசினார்.
வாக்கு சேகரித்து சென்று கொண்டிருந்த வேட்பாளர், ஒரு டீக்கடையில் பொதுமக்களுடன் இயல்பாக கலந்துரையாடிய இளங்கோ, தானே டீ ஆத்தி பொதுமக்களுக்கு வழங்கி, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
மேலும், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இளங்கோவுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
