“காவேரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் போக்கு மிக பெரிய பிரச்சனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் என முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்….”
“தமிழ்நாடு முதலமைச்சர் எங்கு சென்றாலும் அதனை தெளிவாக சொல்வதில்லை எனவும் துரைமுருகன் குற்றச்சாட்டு….”
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்…
அப்போது பேசிய அவர்….
எதற்காக டெல்லிக்கு செல்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறினாரா என கேள்வி எழுப்பியவர் தமிழ்நாடு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மேகதாதுவில் அணை கட்டுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகிறார், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் அணையை கட்டுவேன் என்று கூறுகிறார் என தெரியவில்லை என கூறினார்….
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணைக்கட்ட முடியாது எனக் கூறிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் எங்கு சென்றாலும் அதனை தெளிவாக சொல்லிவிட்டு செல்வதில்லை எனவும் எங்கு சென்றாலும் முதலமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்திய அவர் காவேரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் போக்கு பெரிய பிரச்சனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் எனவும் தெரிவித்தார்….
