நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (நவ.17) அதிகாலை 3 மணி முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கும். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
மண்டல, மகரவிளக்கு சீசன்.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
