கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒற்றை காட்டு மாடு அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் அடிக்கடி காட்டு மாடுகள் கூட்டம் முகாம் இடுவதும், கால்நடைகளையும், பொதுமக்களை தாக்குவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் சாலையில் திடீர் என ஒற்றை காட்டு மாடு உலா வந்தது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்து அருகில் இருந்த கடைகளில் தஞ்சம் அடைந்தனர், குறிப்பாக இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நகர் பகுதிகளில் முகாம் இடும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தவும், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
