Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

 நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (19-11-2025) காலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 22ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் நவ.24ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகரும். காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!