Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பயங்கர வெடிவித்து… கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான வீடு..

பயங்கர வெடிவித்து... கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான வீடு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த பாண்டமங்கலம் மைனர் வீரப்பன் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (50) . இவர் பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் இவரது வீட்டின் மேல்மாடியில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் நாட்டுவெடி, வாணவேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ராஜசேகர், இவரது மனைவி சத்யா (40) உட்பட 5 பேர் ஈடுப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் வீட்டில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததில் வீட்டின் மேல் மாடி கட்டிடம் தரைமட்டமானது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் ராஜசேகர், இவரது மனைவி சத்யா, தொழிலாளி மலர் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல், வேலாயுதபாளையம் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் கட்டிட இடிப்பாட்டில் இருந்து சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கட்டிட இடிப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறியதால் பாண்டமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்தில் வட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!