‘மீசைய முறுக்கு-2’ படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர். இதில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, “என்னைப் பொறுத்தவரை என் உணர்ச்சிகளை படத்தின் வழியே கடத்துகிறேன். என் படங்களில் ஒரு புத்துணர்ச்சி இருக்கும். ரசிகர்கள் நேர்மறை சிந்தனையுடன் படத்தை கொண்டாட வேண்டும் என்பதே என் இலக்கு. எந்தத் தலையீடும் இல்லாமல் என் கலையை படத்தில் கொடுத்தேன். அதற்காக தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. என் படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி” என்றார்.
என் உணர்ச்சிகளை படத்தின் வழியே கடத்துகிறேன்” – ஹிப்ஹாப் ஆதி
