Skip to content
Home » சர்வதேச இசையமைப்பாளராகும் கதிஜா…. ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு கிடைத்த பெருமை…

சர்வதேச இசையமைப்பாளராகும் கதிஜா…. ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு கிடைத்த பெருமை…

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் சிறு பகுதியைப் பாடியதன் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த நிலையில், பிரிட்டன் – இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயன்ஸ்’ என்ற படத்திற்கு இசையமைப்பதன் மூலம் சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதிஜா.

இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும் பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்படக் கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் பெண்களை மையப்படுத்திய கதையாக உருவாகிறது. சீக்கியப் பேரரசின் கடைசி அரசரான துலீப் சிங் வாழ்வை ஒட்டிய கதையாக இது உருவாகிறது. இதன் இன்னொரு பாதியாக 1990ம் ஆண்டில் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் கதையாக உருவாகிறது. இதில் பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். கஜ்ரி பாபர் இந்தப் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Emmerdale star Paige Sandhu opens up about her battle with anxiety -  EasternEye

File:Aditi Rao Hydari on sets of The Drama Company.jpg - Wikipedia

இந்தப் படம் குறித்து கதிஜா பகிர்ந்து கொண்டதாவது, “கதையைக் கேட்டதுமே எனக்குப் பிடித்துவிட்டது. இளவரசி சோபியாவுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் எங்கள் படம் மூலம் அவருக்குக் கிடைக்க வேண்டும்” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!