தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசலில் மாட்டப்பட்டுள்ள சிவப்பு துணி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலக வட்டாரங்கள் பரபரப்பு தகவலை கிசுகிசுத்து வருகின்றனர். அதன்படி, காவிரி, மேகதாது விவகாரங்கள் மற்றும் அவையில் எழும் தொடர் விமர்சனங்களால் துறையில் நிலவும் சிக்கல்கள் தீரவேண்டி, தனது இஷ்ட தெய்வமான மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து இந்தத் துணியை அவர் மாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் சிவப்புத் துணி…என்ன காரணம்?
