சென்னை திருவான்மியூரில் இன்று (அக்.8) மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற கார், எதிர்பாராதவிதமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவான்மியூர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்
