நெல்லை மாவட்டம், மேலச்செவல் அருகே பிரான்சேரி பகுதியில் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி முற்றிலும் உருக்குலைந்ததுடன், பேருந்தும் பலத்த சேதமடைந்தது. இதில் பஸ் நடத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் அஜித் மெல்வின் என்பவர், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
