Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கோரிக்கை

மக்கள் நல்வாழ்வுத் துறையில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் வரும் அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும், தாலுகா மருத்துவமனைகளிலும், தாலுகா அல்லாத மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவர் பணியிடங்களை பணி நிரவல் செய்து சமீபத்தில் தமிழக அரசு அரசாணை 113-ஐ வெளியிட்டு அமல்படுத்தியுள்ளது.
இந்த அரசாணையின்படி பல மருத்துவமனைகளில் மருத்துவப் பணியிடங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாணையை மறு ஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் கீழ் வரும் மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களை உயர்த்த வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவப் பணியிடங்கள் குறைக்கப்படக் கூடாது, மேலும் சீமாங்க் (CEmONC) மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஐந்து மகப்பேறு மருத்துவர்களும், நான்கு மயக்கவியல் மருத்துவர்களும், நான்கு குழந்தைகள் நல மருத்துவர்களும் பணியமர்த்தப்பட வேண்டும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கவன ஈர்ப்புப் கூட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் (TNGDA) சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டமானது, திருச்சிராப்பள்ளி மாவட்ட இணை இயக்குநர் (நலப் பணிகள்) அலுவலக வளாகத்தில், சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளர் தலைமையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இன்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தார்கள்.

error: Content is protected !!