Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

கரூரில் இரவு நேரத்தில் திடீரென எஸ்பி தலைமையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணி: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்.

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர்

மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், கரூர் பழைய பேருந்து

நிலையம் ரவுண்டானா பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை இயக்கி ரோந்து மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகளான ஜவகர் பஜார், ஐந்து ரோடு, வெங்கமேடு, வாங்க பாளையம், முனியப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ரோந்து பணி மேற்கொண்டனர். பின்னர் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டார்.

error: Content is protected !!