Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்…

மருத்துவமனையில் திருடிய சிறுவன் கைது

திருச்சி துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (43) இவர் பிரபல பத்தி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு கடைகளுக்கு விற்பனை தொடர்பாக பேச சென்றார் திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது டூவீலர் திருடு போனது தெரிய வந்தது.
இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பூட்டி இருந்த மருத்துவமனையில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த பணம் ரூபாய் 6000 திருடு போனதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு புகார் கிடைத்தது இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் காட்சிகள் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைக்குழந்தையுடன் இளம் பெண் மாயம்

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி அதே பகுதி சேர்ந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 28 வயது. தம்பதிக்கு ஐந்து மாதங்களில் ஒரு குழந்தை உள்ளது. சுமதி பொன்மலை பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் இந்த நிலையில் சுமதிக்கும் அவரது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு சென்ற சுமதி மாயமானார் எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை இது குறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்

error: Content is protected !!