கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று மாலை மாயனூர் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வாங்க மாயனூருக்கு வந்து மீன் வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தபோது மாயனூர் கடைவீதியில் இருசக்கரவாகனத்தில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முற்பட்டார். அப்போது கரூரில் இருந்து பெட்டவாய்த்தலைக்குச் சென்ற தனியார் பேருந்து மோதி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து சண்முகநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்து மோதி ஏறி இறங்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…
- by Authour
