மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அணையில் நேற்று முன்தினம் ஒரு சொகுசு படகில் 40 சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர்.
படகு அணையின் நடுப்பகுதியில் சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர். தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர், சுற்றுலா பயணிகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தண்ணீர் புகுந்து படகு மூழ்கியது. நேற்று முன்தினம் நடந்த மீட்புபணியில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 15 பேரை உயிருடன் மீட்டனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.இந்த சூழலில் நேற்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
மூழ்கிய படகில் இருந்து அவர்களின் உடல்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. ஒரு தாய், தனது குழந்தையை கட்டியணைத்த நிலையில் இறந்து கிடந்தது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. இதுவரை 28 பேர் மீட்க ப்பட்டுவிட்ட நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்த அதிர்ச்சி தகவல் கிடைத்து ள்ளது. அதுபற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (38). இவர் மத்தியபிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கார்குழலி (38). இந்த தம்பதியின் மூத்த மகன் புவிந்திரன் (11), இளைய மகன் தமிழ்வேந்தன் (5) காமராஜின் மைத்துனரான திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த வேந்தன், அவருடைய மனைவி சவுபாக்கியவதி மற்றும் அவர்களுடைய மகள் என 7 பேர் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணைப்பகுதியில் படகு சவாரி சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் தமிழ்வேந்தன், சவுபாக்கியவதி, அவரது மகள் ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவ ர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் அவரது மனைவி கார்குழலி அவரது இளைய மகன் தமிழ் வேந்தன் மற்றும் அவரது அண்ணி அன்னியின் குழந்தை என ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி மாயமானதாகவும் இதில் புவீந்ரன் உட்பட இரண்டு குழந்தைகள் லைஃப் ஜாக்கெட் போட்டதால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் காமராஜ் கார்குழலி மற்றும் அன்னியின் உடலை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர். காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர் விமானத்தில் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.இதற்கிடையில் துப்பாக்கி தொழிற்சாலை சேர்ந்த அவரது நண்பர்கள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மூலம் அவர்களது உடலை விரைந்து மீட்டு திருச்சிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு வலியுறுத்தி வருகின்றனர்.
தண்ணீரில் மூழ்கி மாயமாகி உள்ள காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்பதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு தொழிற்சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நவல்பட்டு அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த திருச்சி நவல்பட்டு கார்குழலி மற்றும் திருப்பூர் தாராபுரம் செளபாக்கியா ஆகிய இருவரின் உடல்கள், சிறப்பு விமானத்தில் இன்று திருச்சிக்கு வரவுள்ளது.சிறப்பு விமானத்தில் ஒரு உடல் மட்டுமே கொண்டுவரமுடியும் என்பதால், ஒரு உடலுடன் முதல் விமானம் இன்று இரவு 8:30க்கு திருச்சி வந்துசேரும் என்றும், அதனைத்தொடர்ந்து அடுத்த உடல் அடுத்த விமானத்தில் இன்று இரவே வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்டெல்லியை சேர்ந்த சங்கீதா கோரி என்பவர் இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் கூறும்போது, “நாங்கள் டெல்லியில் இருந்து 6 பேர் சபல்பூரை சுற்றிப் பார்க்க வந்தோம். பயங்கரமான காற்றால் படகு தள்ளாடியபோதுதான் பயணிகள் உயிர்காப்பு உடையை தேடி அணிந்தனர். அதுவரை படகு பணியாளர்கள் அவற்றை மறைவான இடத்தில் வைத்திருந்தனர். அதனால் பலருக்கு உயிர்காக்கும் கவசம் கிடைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் படகுக்குள் தண்ணீர் வந்தது.
படகு கவிழ்ந்ததால் எனது குடும்ப உறுப்பினர்களே தண்ணீருக்குள் மாயமானார்கள். இப்போது நாங்கள் 3 பேர் தப்பியிருக்கிறோம். ஒருவர் இறந்துவிட்டார். இன்னும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 2 பேரை காணவில்லை.முன்னெச்சரிக்கையாக செயல்படாததும் அலட்சியமுமே இந்த துயர சம்பவத்துக்கு காரணம். உள்ளூர்வாசிகள் கரையில் இருந்து கூச்சலிட்டு படகை பாதுகாப்பாக செலுத்த படகோட்டிக்கு சைகை செய்தனர். ஆனால் படகோட்டி அனுபவம் இல்லாதவர்போல செயல்பட்டார். சரியான நேரத்தில் படகை திசை திருப்பி இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது” என்று அவர் கண்ணீருடன் கூறினார்.
